ஆன்மிக பரிகாரம்-ராகு-கேது





                                         
                                                                                                                                                                                                                                                        

மனித பிறவி எடுத்த ஒவ்வொருவர் ஜாதகத்திலும் எண்ணற்ற தோஷ்ங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதன்மையான தோஷம் பிதுர் தோஷம் ஞாபக மறதியினாலோ அல்லது வச்தியின்மையாலோ அல்லது கால அவகாசமில்லமல்லோ பிதுர்களுக்குச் செய்யும் திதியை விட்டுவிடுவதால் மிகப்பெரிய தோஷம் ஏற்படுகிறது. இதனால் குடும்ப கஷ்டமும் குழ:ந்தைகளுக்குக் களத்திரதோஷமும் நாகதோஷமும் புத்திரதோஷமும் ஏற்படுகின்றன.

சேடபுரீஸ்வரர் கோயிலில் இராகுவும் கேதுவும் தனியாக இராமல் இருவரும் ஏகசரிரமாக இருப்பது சிறப்பு. எனவே இங்கு வந்து வழிபடுவோர்க்கு
ஜாதகத்தில் கால சர்ப்பதோஷம் இருந்தால்
18 வருட இராகு தசா நடந்தால்
 7 வருட கேது தசா நடந்தால்
லக்னத்திற்கு 2-ல் இராகுவோ கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8-ல் கேதுவோ இராகுவோ இருந்தால்
இராகுபுத்தி கேது புத்தி நடந்தால்


 களத்திர தோஷம் இருந்தால்
 புத்திர தோஷம் இருந்தால்
ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால்
 கனவில் அடிக்கடி பாம்பு வந்தால்
தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால்
இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம்
பரிகாரம் செய்தால் துன்பங்கள் நீங்கி வளம் பல பெறுவர் என்பது திண்ணம்.

                                                                             ராகு துதி

வாகுசேர் நெடுமால் முன்னம்வானவர்க் கமுதம் ஈய

ஏகிநீ நடுவிருக்க எழில்சிரம் அற்றுப்பின்னர்

நாகத்தின் உடலோடுன்றன் நற்சிரம் வாய்க்கப்பெற்ற

ராகுவே போற்றி ரட்சிப்பாய்.

கேது துதி

மாதுரு நெடுமால் முன்னம் வானவர்க்கு கமுதம் ஈயும்

போதுநீ நடுவிருக்க புகழ்சிரம் அற்றுப் பின்னர்

ஓதுறும் அரசநாகத் துயர்சிரம் ஐந்து பெற்ற

கேதுவே போற்றி போற்றி கீர்த்தியாய் ரட்சிப்பாயே
                                                                                                                                          தொடரும்
                                                                                                             

கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்

ஜோதிடமாமணி முனைவர் கணபதி கிருஷ்ணன்

25/64 எரண்டவது தெரு வென்ங்கடேசா நகர்,

விருகம்பாக்கம், சென்னை 92 .